வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு

வேளுக்குடி அங்காளபரமேஸ்வரி கோவிலில் அமாவாசை வழிபாடு;

Update:2022-08-26 22:19 IST

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் பொடி, வில்வபொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்