வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
வடுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது;
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரி பட்டியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட தர்மவர்ஷினி உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வடுகபைரவர் உள்ளார். தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு ரவி குருக்கள் தலைமையில் சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன.
தொடர்ந்து சாமிக்கு 21 வகையான சிறப்பு அபிஷேகம், விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடுகபைரவரை தரிசித்தனர்.