பழனி மலைக் கோவிலில் குவிந்த பக்தர்கள்... 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

பழனி மலைக்கோவிலுக்கு செல்வதற்காக ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.;

Update:2025-12-14 17:45 IST

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வது வழக்கம். விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முக்கிய தினங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வார விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்ததால் பழனி மலைக் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களாக காட்சியளித்தனர். ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்துக்காக 2 மணி நேரம் காத்திருந்தனர். இதேபோல் திரு ஆவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்