திருத்தணி அருகே நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.;

Update:2025-12-15 18:46 IST

திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமத்தில் உள்ள நாகாலம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு, 36 கலசங்கள் வைத்து மாலை 5 மணிக்கு நவகிரக ஹோமம் மற்றும் யாக சாலை பூஜை நடந்தது. இன்று காலை, 9.30 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், கலச ஊர்வலமும் நடந்தது.

பின்னர் மூலவர் அம்மனுக்கு கலசத்தில் இருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. காலை, 10 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் சத்திரஞ்ஜெயபுரம், திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்