ஈரோடு வழியாகஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை

ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.

Update: 2023-01-16 23:49 GMT

ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.

தைப்பூச விழா

தைப்பூச விழா வருகிற பிப்ரவரி மாதம் 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் வழியாகவும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் கடந்த சில நாட்களாக பழனிக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை எடப்பாடி, தாரமங்கலம், ஓமலூர், மகுடஞ்சாவடி, சங்ககிரி, குமாரபாளையம், பள்ளிபாளையம் வெப்படை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈரோடு வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.

பாதயாத்திரை

சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி அனைவரும் நடந்து சென்றனர். வழக்கத்தைவிட நேற்று பனி கடுமையாக இருந்தது. எனினும் பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.

இதனால் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனைச்சாவடி முதல் பன்னீர்செல்வம் பூங்கா வரை எங்கு பார்த்தாலும் முருக பக்தர்களாகவே தெரிந்தனர். பாதயாத்திரையாக சென்ற சிலர் காலிங்கராயன் வாய்க்காலில் குளித்து விட்டு தங்களது பயணத்தை தொடங்கினர். மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஈரோடு குறிக்காரன்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் அன்னதானமும், குடிநீர் பாட்டிலும் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்