சிக்கன முறையில் சுவர்களுக்கு மேற்பூச்சு
வீடுகள் உள்ளிட்ட கட்டிட அமைப்புகள் செங்கற்கள், ‘பிளைஆஷ்’ கற்கள், ‘ஏ.ஏ.சி’ கற்கள் மற்றும் ‘புரோத்தம் பிரிக்ஸ்’ போன்ற பொருட்கள் கொண்டு தற்போது வடிவமைக்கப்படுகின்றன.;
வீடுகள் உள்ளிட்ட கட்டிட அமைப்புகள் செங்கற்கள், ‘பிளைஆஷ்’ கற்கள், ‘ஏ.ஏ.சி’ கற்கள் மற்றும் ‘புரோத்தம் பிரிக்ஸ்’ போன்ற பொருட்கள் கொண்டு தற்போது வடிவமைக்கப்படுகின்றன. கட்டுமான வேலைகள் முடிவடைந்த பிறகு சுவர் பரப்புகளின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் சிமெண்டு காரை கொண்டு பூசப்படுவது வழக்கம்.
மாற்று முறை
மேற்கண்ட சுவர்ப்பூச்சு முறையில் நீண்ட காலமாக ஒரே முறைதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதற்கான மாற்று முறையாக சில வருடங்களுக்கு முன்பே ‘ஜிப்சம்’ பூச்சு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த முறை அதிகமாக பயன்பாட்டில் இல்லாவிட்டாலும், செலவு குறைவு என்ற அடிப்படையில் கவனிக்க தக்கதாக உள்ளது. ‘ஜிப்சம் சல்பேட்’ கொண்டு சுவர்களின் மேற்பரப்பை பூசும் முறை பற்றிய குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
வெள்ளை வண்ணம்
‘கால்சியம் சல்பேட்’ என்ற தாதுப்பொருள் இருக்கும் காரணத்தால், ‘ஜிப்சம்’ பூசப்பட்ட சுவர்கள் பளிச்சென்ற வெள்ளை நிறம் கொண்டதாக இருக்கும். வெப்பம் மற்றும் நெருப்பு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ‘ஜிப்சம்’ சுவர்களில் உண்டாவதில்லை. சுவர் பரப்புகள் எதுவாக இருந்தாலும் ‘ஜிப்சம்’ பூசுவதற்கு எளிதாக இருக்கும். அதற்கு முன்னதாக, சுவரில் ஒரு குறிப்பிட்ட ரசாயனத்தை மேலே பூசி விடுவது அவசியமானதாகும்.
சிக்கன வழி
இத்தகைய சுவர் பூச்சு வேலையில் சிமெண்டு, மணல் போன்றவற்றை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. பொதுவாக கட்டமைப்புகளுக்கான மேற்பூச்சு வேலையானது, அதன் மொத்த அளவில் மூன்றில் இரண்டு பங்காக இருக்கும். மேலும், கதவுகள், ஜன்னல்கள், பரண்கள், சுவர் அலமாரிகள் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் செய்யப்படும், மேற்பூச்சு வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சிறப்பம்சங்கள்
1. சிமெண்டு பூசப்பட்ட சுவர்களுக்கு 12 நாட்கள் வரையில் தண்ணீர் தெளித்து வரவேண்டும். ‘ஜிப்சம்’ பூச்சு முறையில் நீர் தெளிக்கும் அவசியமில்லை.
2. வழவழப்பான தளங்கள் உட்பட சலக விதமான தரைப்பரப்பு மற்றும் சுவர்களில் ‘ஜிப்சம் மேற்பூச்சை’ கூடுதல் வேலைகள் இல்லாமல் எளிதாக அமைக்கலாம்.
3. பயன்படுத்த தயார் நிலையில் ‘ஜிப்சம் சல்பேட்’ கிடைப்பதால் பூச்சு வேலைகளுக்கு எவ்வளவு வேண்டுமோ அந்த அளவுக்கு வாங்கினால் போதும். அதனால் மூலப்பொருட்கள் விரயம் தவிர்க்கப்படும்.
4. துளையிடுவது, காடிகள் எடுப்பது போன்ற வேலைகளை செய்யும்போது சிமெண்டு கலவை பூசிய சுவரின் கடினத்தன்மை ‘ஜிப்சம்’ சுவரில் இருக்காது.
5. சலித்து எடுக்கப்பட்ட மணலுடன் சிமெண்டை சரியான விகிதத்தில் கலக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ‘ஜிப்சம்’ பயன்படுத்த தயார் நிலையில் கிடைக்கிறது.
6. ‘ஜிப்சம்’ சுவர் பூச்சுகள் எடை குறைவாக இருப்பதோடு, சுவர் பூச்சுக்கான செலவில் 25 சதவிகிதம் சேமிக்க இயலும் என்பது கவனிக்கத்தக்கது.