தெரிந்துகொள்வோம்: ‘ஏட்ரியம்’

வீடுகளில் வழக்கமாக அமைக்கப்படும் மேற்கூரை ‘சீலிங்’ எனப்படும். அந்த அமைப்பு நன்றாக உயர்த்தப்பட்டு, சூரிய வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இயற்கை சக்திகள் கட்டமைப்புக்குள் வருவது போன்று அமைக்கப்படுவது ‘ஏட்ரியம்’ எனப்படும்.

Update: 2017-03-10 20:30 GMT
வீடுகளில் வழக்கமாக அமைக்கப்படும் மேற்கூரை ‘சீலிங்’ எனப்படும். அந்த அமைப்பு நன்றாக உயர்த்தப்பட்டு, சூரிய வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இயற்கை சக்திகள் கட்டமைப்புக்குள் வருவது போன்று அமைக்கப்படுவது ‘ஏட்ரியம்’ எனப்படும். அதாவது, கட்டிடத்தின் மையப்பகுதியில் வெளிச்சமும், காற்றும் உள்ளே வருவதற்கு வசதியாக கூரைப்பகுதி உயரமாகவும், திறப்புகளுடனும் இருக்கும். பொதுவாக, இந்த அமைப்பு மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய அலுவலகங்கள் போன்றவற்றின் மையப்பகுதியில் அமைக்கப்படுகிறது. ‘உட்புற முற்றம்’ என்று தமிழில் இதை சொல்லலாம்.

மேலும் செய்திகள்