தெரிந்துகொள்வோம்: 'பேஸ்போர்டு'

வீட்டின் சுவர்களும் தரைப்பகுதியும் இணையும் இடமானது மரப்பலகைகள் அல்லது 'டைல்ஸ்' வகைகள் ஒட்டப்பட்டு, அப்பகுதி சற்றே வித்தியாசப்படுத்தி அமைக்கப்பட்டிருப்பதை பல இடங்களில் பார்த்திருப்போம்.

Update: 2017-04-14 22:30 GMT
அந்த முறையானது 'பேஸ்போர்டு' என்று சொல்லப்படும். பெரும்பாலும் நமது பகுதிகளில் டைல்ஸ் அல்லது மார்பிள் வகை கற்கள் தரையின் வண்ணத்திற்கேற்ப பதிக்கப்படுவது வழக்கம். மேலும், அழகுக்காக ஒட்டு மரப்பலகைகள் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

5 அல்லது 6 அங்குல மரப்பலகையானது அறையின் அளவுக்கேற்பவும், தரைத்தள அமைப்புக்கு ஏற்பவும் பதிக்கப்படும். அந்த பலகைக்கு கீழ்ப்புறமாக ஒட்டப்படும் சிறிய அளவு மர 'பீஸ்' ஆனது 'பேஸ் ஷ¨' என்று சொல்லப்படும். அந்த பலகைக்கு மேற்புறமாக பதிக்கப்படும் மர 'பீஸ்' ஆனது 'பேஸ் கேப்' என்று சொல்லப்படும். இந்த முறைக்கு 'ஸ்கர்டிங்' மற்றும் 'புளோர் மோல்டிங்' என்ற பெயர்களும் உண்டு. 

மேலும் செய்திகள்