கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள் அனைத்து வசதிகளும் கொண்ட ஹை–டெக் நகரங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது.;

Update:2017-07-29 03:15 IST
த்திய அரசால் அறிவிக்கப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள் அனைத்து வசதிகளும் கொண்ட ஹை–டெக் நகரங்களாக மாற்றி அமைக்கப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களுடன், அனைத்துவிதமான உள்கட்டமைப்பு வசதிகள் கூடியதாக உருவாக்கப்படும்.

‘ஸ்மார்ட் சிட்டி’ மக்களின் வாழ்க்கை தரம், சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடும் வகையில் மேம்பட்டதாக இருக்கும். மேலும், சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், அதிவேக இணைய வசதி, தானியங்கி முறையில் கழிவு அகற்றும் நடைமுறைகள், சிறப்பான பொது போக்குவரத்து, ‘டிஜிட்டல்’ மயமாக்கப்பட்ட பொது சேவைகள், மலிவு விலை வீடுகள் ஆகியவை ‘ஸ்மார்ட் சிட்டியின்’ முக்கியமான கட்டமைப்பு அம்சங்கள் என அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், இதுவரை, 60 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை,

ஆகிய நகரங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் வெளியான ‘ஸ்மார்ட் சிட்டியின்’ அடுத்த பட்டியல் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில், திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்