கட்டமைப்புகளுக்கு பணி நிறைவு சான்றிதழ் அவசியம்

D.T.C.P எனப்படும் நகர ஊரமைப்பு துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் பற்றிய விளக்க கூட்டம் சென்ற மாதம் சென்னையில் நடந்தது.

Update: 2017-09-01 22:15 GMT
D.T.C.P. எனப்படும் நகர ஊரமைப்பு துறை நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டுமானங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் பற்றிய விளக்க கூட்டம் சென்ற மாதம் சென்னையில் நடந்தது. C.M.D.A எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் கட்டமைப்புகளுக்கு பணி நிறைவு சான்றிதழ் வழங்குவது நடைமுறையில் இருப்பதுபோல டி.டி.சி.பி பகுதிகளுக்கும் அதை நடைமுறைப்படுத்துவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நிர்வாக ரீதியான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளக்க கூட்டம்

மேற்கண்ட நடவடிக்கைகள் பற்றிய கருத்துக்களை கட்டுமானத் துறையினரிடமிருந்து பெறுவதற்கும், தக்க புரிதலை அவர்களிடம் ஏற்படுத்துவதற்கும் விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், கூட்டத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், அங்கீகாரமில்லா மனைகளுக்கான வரன்முறை விதிகள், விதி மீறல் கட்டிடங்களை வரன்முறை செய்வது மற்றும் அதன் திட்டம் ஆகியவை பற்றியும் கட்டுமான துறையினருக்கு விளக்கங்கள் தரப்பட்டன. சி.எம்.டி.ஏ மற்றும் டி.டி.சி.பி ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், கட்டுனர்கள் மற்றும் கட்டுமான பொறியியல் வல்லுனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வங்கிகளுக்கு அவசியம்


வங்கி கடன் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் வழக்கமாக தர வேண்டிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு சான்றுகளோடு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கான கட்டுமான பணி நிறைவு சான்றிதழையும் வங்கிகள் கேட்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்