தென்னை நாரில் வீடுகள் அமைக்கும் தொழில்நுட்பம்
தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் நார் மூலம் தயாரிக்கப்பட்ட பலகைகள் மூலம் வீடு ஒன்றை மத்துய கயிறு வாரியம் அமைத்துள்ளது.;
சுற்று சூழலை பாதுகாக்கும் மரங்கள் வெட்டப்பட்டு, கட்டிடங்களுக்கு பயன்படுத்தும் நிலையில், மரங்களை வளர்த்து அவற்றின் மூலப்பொருட்களை கொண்டு கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் நார் மூலம் தயாரிக்கப்பட்ட பலகைகள் மூலம் வீடு ஒன்றை மத்துய கயிறு வாரியம் அமைத்துள்ளது. இன்றைய சூழலில் இயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு அறியப்பட்டிருப்பதால், தென்னை நார் போன்ற இயற்கை பொருட்களின் உபயோகம் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவை அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.
மண்ணுக்கு மாற்று
நகர்ப்புறங்களில் அமைக்கப்படும் வீட்டு தோட்டங்களில் மண்ணுக்கு மாற்றாகவும், வீட்டு உபயோக பொருட்களில் (பர்னிச்சர்கள்) மரத்துக்கு மாற்றாகவும் தென்னை நார் பயன்படுகிறது. அதன் அடிப்படையில், சோதனை முயற்சியாக தென்னை நாரில் தயாரிக்கப்பட்ட பலகைகள் மூலம் வீடு ஒன்றை மத்திய கயிறு வாரியம் உருவாக்கியுள்ளது. கேரள பாணியில் அமைக்கப்பட்ட அந்த வீட்டின் சுவர், கதவு, ஜன்னல், தரை விரிப்புகள், தூண் மற்றும் இதர பொருட்கள் அனைத்தும் தென்னை நார் மற்றும் அதன் துகள்களால் உருவாக்கப்பட்டுள்ளன.
இயற்கை சூழல்
இயற்கை விவசாயம், மாடித்தோட்டம் என இயற்கைக்கு ஏற்ப வீட்டின் சூழலை அமைத்துக்கொள்வதை பலரும் விரும்புகின்றனர். அதன் அடிப்படையில், தென்னை நார் மற்றும் அதன் துகள்களின் மூலம் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பத்துக்கு வர்த்தக ரீதியான வாய்ப்புகள் ஏற்படும் வாய்ப்புகளை கணக்கில் கொண்டு இவ்வகை வீட்டை மத்திய கயிறு வாரியம் வடிவமைத்துள்ளது.
பாதுகாப்பானது
பயன்படக்கூடிய விதங்களுக்கேற்ப மூன்றுக்கும் மேற்பட்ட வகை தென்னை நார் பலகைகள் தயாரிக்கப்படுகின்றன. வீடுகள் கட்டமைப்பில் வெவ்வேறு மரங்களின் பயன்பாடுகளுக்கு மாற்றாகவும், வலிமையுடன், நீர் கசிவு இல்லாமல், எளிதில் தீ பற்றாமல், மர வேலைப்பாடுகளுக்கு சுலபமாக உள்ள வகையில் இந்த பலகைகள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இயற்கை பொருட்களை விரும்புபவர்களின் மனம் கவரும் வகையில் தென்னை நார் பலகைகள் மூலம் மேற்கண்ட வீடு சோதனை முயற்சியாக உருவாக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தட்ப வெப்ப தடுப்பு
வரும் காலங்களில் தட்பவெப்ப நிலை மாறுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வீடுகளை அமைக்க தென்னை நார் பலகைகள் உகந்ததாகவும், பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தென்னை நார் அட்டையால் அமைக்கப்பட்ட வீடுகளுக்குள் வரக்கூடிய வெப்பம் மற்றும் குளிர் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. தென்னை நார் பலகை மூலம் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு குறைந்த முதலீடு என்ற நிலையில் விரைவில் இவ்வகை வீடுகள் சந்தைக்கு வர இருக்கின்றன.