வங்கி வட்டி கடன் விகிதம் குறைத்து அறிவிப்பு

ரிசர்வ் வங்கியானது, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

Update: 2017-09-22 21:00 GMT
ரிசர்வ் வங்கியானது, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. ரெப்போ ரேட் விகிதம் என்று சொல்லப்படும் இந்த வட்டி விகிதம் 10 மாத இடைவெளிக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளதால், இந்த விகிதம் இப்போது 6 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக் கொள்கை குழு (எம்.பி.சி) மும்பையில் நடத்திய நிதிக் கொள்கைக்கான ஆய்வு கூட்டத்தில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விகிதமானது கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவானதாக உள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் அளிக்கப்படும் வீட்டு கடன் மற்றும் வீட்டு மனைக்கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

‘தற்போது நிலவும் பொருளாதார சூழலில், வட்டி விகிதங்களை குறைப்பதால் பணவீக்கம் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது..’ என்று ரிசர்வ் வங்கி கவர்னரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்