சென்னை பெருநகரில் அடங்கியுள்ள பகுதிகள்

தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை, இந்தியாவின் 4–வது பெரிய பெருநகரமாகும்.

Update: 2017-11-24 22:15 GMT
மிழ் நாட்டின் தலைநகர் சென்னை, இந்தியாவின் 4–வது பெரிய பெருநகரமாகும். சென்னைப் பெருநகர் பகுதியானது, சென்னை மாநராட்சி உள்ளிட்ட 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 214 பகுதிகள் ஆகியவற்றின் பரப்பளவு 1189 சதுர கிலோ மீட்டராகும்.

சென்னை பெருநகர் பகுதி தமிழ்நாடு மாநிலத்தின் 3 மாவட்டங்களில் அமைந்துள்ளது. அதாவது, சென்னை மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

சென்னை மாவட்டத்தில் கோட்டை– தண்டையார்பேட்டை வட்டம், பெரம்பூர்–புரசைவாக்கம் வட்டம், எழும்பூர்–நுங்கம்பாக்கம் வட்டம், மாம்பலம்–கிண்டி வட்டம் மற்றும் மைலாப்பூர்– திருவல்லிக்கேணி வட்டம் ஆகிய 5 வட்டங்களை கொண்டது. அவற்றில் 55 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய 176 கிலோ மீட்டர் பரப்பளவினையும் கொண்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி, மற்றும் பூந்தமல்லி ஆகிய வட்டங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய வட்டங்களும் சென்னை பெருநகரில் அடங்குகின்றன.

மேலும் செய்திகள்