சுவரில் பொருத்தக்கூடிய அலமாரிகள்

வீடுகளில் கூடுதலாக அலமாரிகள் தேவைப்படும் சமயங்களில் கை கொடுப்பவை ரெடிமேடு அலமாரிகள்தான். குறிப்பாக, வாடகை வீட்டில் தரைமட்ட அளவில் ‘வால் ஷெல்ப்’ எனப்படும் சுவருக்குள் அமைக்கப்பட்ட ‘கான்கிரீட்’ அலமாரிகள் இருக்கும்.

Update: 2018-02-02 21:15 GMT
‘கான்கிரீட்’ அலமாரிகள் இல்லாத பட்சத்தில் மரம் அல்லது இரும்பினால் செய்யப்பட்ட ‘ரெடிமேடு’ அலமாரிகளை பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். அவ்வகை அலமாரிகளில் அளவில் சிறியதாகவும், சுவரில் 4 அடி உயரத்தில் ஆணிகள் அல்லது ‘ஸ்குரூக்கள்’ பொருத்தப்பட்டு அதில் மாட்டக்கூடிய வகையில் ‘ரெடிமேடாக’ கிடைப்பவை ‘ஹேங்கிங் வால் ஷெல்ப்’ ஆகும்.

அவற்றில் புகைப்படங்கள், பரிசுப்பொருட்கள், சிறிய கடிகாரங்கள் மற்றும் பொம்மைகள் ஆகியவற்றை கச்சிதமாக அடுக்கி வைக்கலாம். அதன் காரணமாக போட்டோக்கள் மாட்டுவதற்காக சுவரில் துளைகள் போடுவது தவிர்க்கப்படும்.

கூடுதலாக, வாஸ்து முறைப்படி வீடுகளில் மாட்டி வைக்கப்படும் ‘பா–குவா’ கண்ணாடி, அரவானா மீன் சின்னம் மற்றும் சிருக்கும் குபேரன் சிலை ஆகியவற்றையும் அதில் வைத்துக்கொள்ளலாம்.

மேலும் செய்திகள்