அறைகளில் ஏற்படும் எதிரொலியை தடுக்கும் முறைகள்

வீடுகளில் உள்ள சில அறைகளில் பேசும்போது எதிரொலி ஏற்படுவதை கவனித்திருப்போம். எதிரொலி என்பது ஒலியின் உடனடி எதிர்வினையாகும்.

Update: 2018-02-02 21:30 GMT
ஒலி சுவரில் பட்டு உடனடியாக அறை முழுதும் எதிரொலிக்கிறது. பொருட்கள் ஏதுமில்லாத பெரிய அறையில் பேசினால் அது எதிரொலிப்பதை அனைவரும் அறிவோம்.

தரை விரிப்பு

வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் அமைக்கப்பட்ட வழுவழுப்பான தளங்கள் ஒலி அலைகளை சிதறடிக்காமல் அப்படியே எதிரொலிக்கின்றன. அறைகளின் தரையில் சற்று தடிமனான விரிப்பை அமைத்து வைத்தால், அது சப்த அலைகள் எதிரொலிப்பதை தடுப்பதோடு அறைக்கும் அழகாக தோற்றமளிக்கும்.

காட்டன் திரைகள்

கான்கிரீட் தரை அல்லது சுவர் பரப்புகள் ஒலியை நன்றாக எதிரொலிக்க கூடிய தன்மை பெற்றவை. அதனால், காட்டன் திரைச் சீலைகள், கேன்வாஸ், உலோகம் அல்லது மரத்தாலான ஓவியங்கள் போன்றவற்றை அறையில் மாட்டி வைப்பது பலன் தரும்.  

புத்தக அலமாரி

உயரமான புத்தக அலமாரிகளும், அதற்குள் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களும் எதிரொலியை குறைப்பதாக அறியப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்
Acoustic panel அல்லது Acoustic board போன்றவற்றின் இரு சுவர்களுக்கு இடையில் ஒலியை உள்வாங்கிக் கொள்ளும் பொருள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், அவற்றின் சுவர்கள் துளைகள் கொண்டதாக இருப்பதால் ஒலி எதிரொலிப்பது தடுக்கப்படுகிறது. அதன் காரணமாக, பெரிய அரங்குகள், நூலகங்கள் ஆகியவற்றில் இவை பொருத்தப்படுகின்றன.

கோண அளவு

எதிரொலி ஏற்படக்கூடிய கோண அளவை கணித்த பிறகே பெரிய அளவிலான  கட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு இல்லாவிட்டால் ஒலி மற்றும் அதன் எதிரொலி ஆகியவை சரியாக அமையாமல் குழப்பமாக இருக்கும்.?

மேலும் செய்திகள்