கூடுதல் கடன் பெற ‘ஸ்டெப் அப் லோன்’ முறை

வங்கிகளில் பெறக்கூடிய வழக்கமான கடன் அளவை விடவும், கூடுதலாக வீட்டு கடன் தொகை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் திட்டம் ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும்.

Update: 2018-02-16 22:30 GMT
வீட்டு கடன் பெறுபவருக்கு எதிர்காலத்தில் வருமானம் அதிகமாகும் என்ற அடிப்படையில், குறிப்பிட்ட அளவு கூடுதல் கடன் தொகை இந்த முறைப்படி அளிக்கப்படுகிறது.

எதிர்கால வளர்ச்சி

எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சி அடையலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய துறையில், வேலைக்கான தகுதியுடன் பணி புரிந்து வருபவர்களுக்கு ஏற்ற கடன் வகை ‘ஸ்டெப் அப் லோன்’ ஆகும்.

அதாவது, இன்றைய வருமானத்தின் அடிப்படையில் கிடைக்கும் கடன் தொகை, பெரிய வீட்டை வாங்குவதற்கு போதுமானதாக இல்லாத நிலையில் வீட்டுக்கடனை இந்த திட்டம் மூலம் அதிகமாக பெற இயலும்.

வட்டி விகிதத்தில் மாற்றம்

இந்த வீட்டு கடன் திட்டத்தில் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடுவதோடு, கடன் தொகை பல்வேறு தவணைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும்.

அதன் அடிப்படையில் திருப்பி செலுத்தப்படும் வீட்டு கடனுக்கான ஆரம்ப கால மாதாந்திர

 தவணை தொகை குறைவாக இருக்கும். காலம் செல்லச் செல்ல மாதாந்திர தவணை தொகையை கூடுதலாக திருப்பி செலுத்தும்படி இருக்கும்.

மேலும் செய்திகள்