கான்கிரீட் தள அமைப்பில் தொழில்நுட்பம்

கட்டுமான பணிகளில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்போது பல்வேறு குறைகள் ஏற்படுவதாக கட்டிட பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-02-16 23:15 GMT
காற்றுக்குமிழ்கள், தேன்கூடு வடிவ பாதிப்புகள், கான்கிரீட் கலவை எல்லா இடங்களிலும் சரியாக பரவாமல், ஆங்காங்கே இடைவெளி ஏற்படுவது போன்ற குறைபாடுகள் வருவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேற்கண்ட பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்களில் ‘வைப்ரேட்டர் நீடில்’ என்ற கருவியும் ஒன்று. அதை உபயோகிக்கும்போது கவனத்தில் கொண்டு செயல்படவேண்டிய குறிப்புகள் பற்றி இங்கே காணலாம்.

* பொதுவாக 40 எம்.எம் அளவு கனமுள்ள ‘நீடில்கள்’ பயன்படுத்துவது நல்ல முறையாகும்.

* ‘வைப்ரேட்டர் நீடில்’ பயன்படுத்தும்போது செங்குத்து வசமாக மட்டுமே அதை இயக்க வேண்டும். சாய்ந்த வசத்தில் வைத்து அதை இயக்குவது தவறான முறையாகும்.

* ஒரு குறிப்பிட்ட ‘பாயிண்டில்’ 30 வினாடிகள் இயக்கினாலே போதுமானது. மேலும், வெளியே எடுக்கும்போது அதில் குழி ஏற்படாதவாறு விரைவில் எடுத்துவிட வேண்டும்.

* அதிக பயன்பாடு காரணமாக அடிக்கடி ‘நீடிலை’ மாற்ற வேண்டி இருப்பதால் கூடுதலாக ‘ஸ்டாக்’ வைத்துக்கொள்வது பல சிக்கல்களை தவிர்க்கும்.

* ‘வைப்ரேட்டர் நீடில்’ பயன்படுத்தும்போது கான்கிரீட்டுக்குள் இருக்கும் ‘சென்டரிங்’ அமைப்பில் உராயும் பட்சத்தில் ‘நீடில்’ பாதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

* அதிக நேரம் ‘நீடில்’ பயன்படுத்தப்பட்டால் கான்கிரீட் அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நீர்த்துப்போனது போல மாறி விடும்.

* இன்னொரு முறை ‘நீடில்’ பயன்படுத்தப்பட வேண்டும் என்ற  நிலையில் விரைவாகவும், அதே சமயம் அவசரமில்லாமலும் பயன்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்