கட்டிட அமைப்புகளை பாதிக்கும் இருவித எடைகள்

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான கட்டிடங்கள் ‘Column Footings’ முறையில் அமைக்கப்படுகின்றன.

Update: 2018-04-14 00:00 GMT
‘Column  Footings’ முறையில் தூண்கள் (Piller) மீது அனைத்து தளங்களும் தக்க இடைவெளியில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டதுபோல கட்டமைக்கப்படுகிறது.

தூண்கள்

தரையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சமதளத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மேல் மற்றொரு சமதளம் கான்கிரீட் பரப்பு அமைக்கப்பட்டு அதற்கு மேல் தூண்கள் என்று அடுக்கடுக்காக கட்டிடங்கள் இருக்கும். இரண்டு தூண்களை இணைப்பதற்கு கான்கிரீட் உத்திரம் (Beam) பயன்படுத்தப்படும். அதற்கு மேற்புறத்தில் தூண்கள், அதற்கு மேல் உத்திரம் என்ற அமைப்பில் மொத்த கட்டிடமும் அமைகிறது. இந்த முறையில் கட்டமைப்பின் மொத்த எடையும் தூண்கள் மற்றும் கான்கிரீட் சமதளத்தின்மீது பரவலாக தாங்கப்படும்.  

எடை கணக்கீடு

பொதுவாக, கட்டிட அமைப்புகளை பாதிக்கும் இரண்டு எடைகள் கணக்கில் கொள்ளப்படுவது அவசியம் என்று வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலாவது, டெட்லோடு (Dead Load) ஆகும். அதாவது, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தின் மொத்த எடை ‘டெட்லோடு’ ஆகும். இரண்டாவது லிவ் லோடு (Live Load) ஆகும். அதாவது, குடியிருக்கும் மனிதர்கள், வந்து போகும் மனிதர்கள், வீட்டில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் ஆகியவை ‘லிவ்லோடு’ ஆகும். அது மாறிக்கொண்டே இருக்கும் தன்மை பெற்றதாகும். அதன் அடிப்படையில், தோராயமாக கணக்கீடு செய்து இரண்டு எடையையும் கூட்டி, அதற்கேற்ப அஸ்திவாரம் மற்றும் கட்டிட வடிவமைப்பு ஆகியவை அமைக்கப்படுவது அவசியமானது.

பழைய கட்டுமானங்கள்

மேற்கண்ட முறையில் கட்டிடத்தின் இருவித எடைகளின் அடிப்படையில் சரியாக அமைக்கப்படும் அஸ்திவாரம் நீடித்து நிற்கும். அதுபோன்று அமைக்கப்பட்ட காரணத்தால்தான் அரண்மனைகள், கோவில்கள், அணைக்கட்டுகள் ஆகியவை இன்று வரை நிலைத்து நிற்கின்றன.

மேலும் செய்திகள்