எளிதில் வங்கி கடன் பெற உதவும் ‘சிபில்’ அறிக்கை

‘சிபில்’ என்பது ஒவ்வொரு வங்கியும் தங்களிடம் கடன் பெற்றவர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளும் அமைப்பாக செயல்படுகிறது.

Update: 2018-05-12 04:57 GMT
‘சிபில்’ அமைப்பு அளிக்கும் அறிக்கையில் உள்ள ரேட்டிங் அடிப்படையில் சம்பந்தப்பட்டவருக்கு வங்கிகள் கடன் அளிப்பதை முடிவு செய்கின்றன.

அதாவது. இதற்கு முன்பு வேறொரு வங்கியில் கடன் பெற்று, அதை சரியான தவணைகளில் திருப்பி செலுத்தப்பட்டுள்ள விபரங்களை வைத்து ‘சிபில் ஸ்கோர்’ கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடன் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். முதல் முறையாக கடன் வாங்குபவர்கள் ‘சிபில் ரேட்டிங்’ பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஒருவரது ‘சிபில் ரேட்டிங்’ பற்றி அவரவர்களே நேரடியாக தெரிந்து கொள்ளலாம். அதற்கான விண்ணப்பம் ஆன்-லைனில் கிடைக்கிறது. அதனுடன் பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பேங்க் ஸ்டேட்மென்ட், டெலிபோன் பில், மின் கட்டணம் போன்ற சுய அடையாளங்களுடன் ‘சிபில்’ அமைப்பின் இணைய தளம் மூலம் விண்ணப்பம் செய்து பெறலாம். வருடத்தில் ஒரு முறை ஒருவரது சிபில் ஸ்கோர் அறிக்கையை இலவசமாக பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்