கட்டமைப்புகளில் ‘பிளிந்த் ஏரியா’ கணக்கிடும் முறை

ஒரு கட்டமைப்பின் மொத்த பரப்பளவு பிளிந்த் ஏரியா என்று குறிப்பிடப்படும். பொதுவாக, பரப்பளவு கணக்கிடும்போது சுவர்களது கன அளவுகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

Update: 2018-05-18 21:00 GMT
ரு கட்டமைப்பின் மொத்த பரப்பளவு பிளிந்த் ஏரியா என்று குறிப்பிடப்படும். பொதுவாக, பரப்பளவு கணக்கிடும்போது சுவர்களது கன அளவுகளையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு கட்டிடத்தில், கீழ்த்தளத்தில் உள்ள வெளிப்புற நீள அகலங்களைக் கொண்டு ‘பிளிந்த் ஏரியா’ கணக்கிடப்படும். அதன்படி ஒவ்வொரு தளத்தையும் தனித்தனியாகக் கணக்கிட்டு மொத்த பிளிந்த் ஏரியா என்ன என்பதை கண்டறியலாம்.

கட்டமைப்புகளில் உள்ள திறந்த வெளிப்பகுதிகள், மாடியின் முகப்பு பகுதி (Balcony) மற்றும் தூண்களை ஆதாரமாக கொண்டு நீட்டப்பட்ட அமைப்பு (Cantilever) ஆகியவை ‘பிளிந்த் ஏரியா’ கணக்கில் சேராது. சார்பு பகுதிகள் அல்லது முட்டுடன் அமைக்கப்பட்டுள்ள முக மண்டபம் (Supported Porchcs) ஆகியவை பிளிந்த் ஏரியாவில் அடங்கும்.

மேலும் செய்திகள்