குறைந்த பரப்பளவு கொண்ட மனைகளுக்கும் கட்டுமான அனுமதி

சென்னை பெருநகருக்கு உட்பட்ட பகுதிகளில் சி.எம்.டி.ஏ அமைப்பு கட்டுமான அனுமதியை வழங்கி வருகிறது.

Update: 2018-06-29 23:00 GMT
சென்னை பெருநகருக்கு உட்பட்ட பகுதிகளில் சி.எம்.டி.ஏ அமைப்பு கட்டுமான அனுமதியை வழங்கி வருகிறது. பொதுமக்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதியதாக அமைக்கப்படும் லே–அவுட்களில் உள்ள மனைகளின் குறைந்தபட்ச அளவு 800 சதுரடி இருக்கலாம் என்று நிர்ணயம் செய்து, கட்டுமான அனுமதியை அளித்து வருகிறது.

முந்தைய அளவுகள்

சென்னை பெருநகருக்கு உட்பட்ட பகுதிகள் தவிர தமிழகத்தின் இதர பகுதிகளுக்கான கட்டுமான அனுமதிகளை நகர ஊரமைப்பு இயக்ககம் என்ற டி.டி.சி.பி அளிக்கிறது. அந்த அமைப்பானது மனைகளுக்கான குறைந்தபட்ச அளவு 1500 சதுர அடியாக இருக்க வேண்டும் என்றும், அதன் முகப்பு பகுதியின் அகலம் 30 அடியாகவும், நீளம் 50 அடியாகவும் இருக்க வேண்டும் என கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி வந்தது. அதனால், சிறிய அளவு கொண்ட மனைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

புதிய அளவுகள்

தற்போது, அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. அதாவது, டி.டி.சி.பி அமைப்பின் புதிய சுற்றறிக்கையின்படி, மனைகளின் குறைந்தபட்ச அளவை மாற்றி அமைப்பது குறித்து சமீபத்தில் நடந்த உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப மனைகளின் குறைந்தபட்ச அளவானது 1500 சதுர அடியில் இருந்து, 800 சதுர அடியாக குறைக்கப்பட்டிருக்கிறது. மனையின் முன்புற அகலம் 20 அடி, நீளம் 40 அடியாக இருக்கலாம் எனவும் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. மேலும், திறந்தவெளி ஒதுக்கீடு என்ற நிலையில், அணுகுபாதைக்காக ஒதுக்கிய இடம் தவிர மற்ற இடங்களில், 10 சதவிகிதம் ஒதுக்கும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்