குடியிருப்புகளில் உருவாகும் காற்று மாசு

சமையலறை நல்ல காற்றோட்ட வசதியுள்ளதாகவும், சுத்தமானதாகவும் வைத்திருப்பது அவசியம்.

Update: 2018-07-07 04:27 GMT
வீடுகளின் சமையலறையிலிருந்து வெளியாகும் வெவ்வேறு வாயுக்கள், தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் ‘சவுண்ட் பொல்யூஷன்’, கழிவு நீர் மூலம் உண்டாகும் ‘பொல்யூஷன்’, ‘ரெப்ரிஜிரேட்டர்’ மற்றும் ‘ஏ.சி’ ஆகியவை மூலம் காற்றில் கலக்கும் மாசு ஆகியவற்றை சூழலியல் நிபுணர்கள் ‘இண்டோர் பொல்யூஷன்’ (Indoor Pollution) என்று சொல்கிறார்கள்.

பழைய காலங்களைப்போல புகை மண்டலத்தை உண்டாக்கும் விறகு அடுப்பு உபயோகம் இப்போது இல்லை. தற்போது அனைத்து வீடுகளிலும் சமையல் பணிகளுக்கு பெட்ரோலிய எரிவாயு பயன்படுகிறது. பெட்ரோலிய வாயு இயல்பில் வாசனைகளற்றது. அதனுடன் கலக்கப்படும் பொருள்தான் வாசனையை உண்டாக்குவதோடு, பலருக்கும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.

அதனால், சமையலறை நல்ல காற்றோட்ட வசதியுள்ளதாகவும், சுத்தமானதாகவும் வைத்திருப்பது அவசியம். ‘ரெப்ரிஜிரேட்டர்’ மற்றும் ஏ.சி ஆகியவற்றின் மூலமாக வெளியாகும் ‘கார்பன்’ வகை வாயுக்களும் ஆரோக்கிய குறைவை உண்டாக்குவதால், தேவைப்படும்போது மட்டும் அவற்றை பயன்படுத்துவது நல்லது. அதன் காரணமாக, காற்று மாசுகளால் ஆரோக்கியக்குறைவு ஏற்படும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும் என்பது நிபுணர்கள் கருத்தாகும். 

மேலும் செய்திகள்