இரண்டு வகை குளியல் அறைகள்

வீடுகளில் கழிவறை அமைப்பு என்பது சாதாரணமான வி‌ஷயம். கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக இரண்டு வகை ‘டாய்லெட்கள்’ இருப்பதாக பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Update: 2018-07-13 22:30 GMT
வீடுகளில் கழிவறை அமைப்பு என்பது சாதாரணமான வி‌ஷயம். கட்டுமான தொழில்நுட்ப ரீதியாக இரண்டு வகை ‘டாய்லெட்கள்’ இருப்பதாக பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ‘வெட் டாய்லெட்’  மற்றும் ‘டிரை டாய்லெட்’ ஆகியனவாகும். மேலைநாட்டின் கழிவறைகளில் ‘டிஸ்யூ பேப்பர்’ பயன்படுத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் இருவகை டாய்லெட்டுகள் தொழில்நுட்ப முறைப்படி குறிப்பிடப்படுகின்றன. 

நமது பகுதி டாய்லெட் அமைப்புகளில் தண்ணீர் பயன்பாடு பிரதானமாக உள்ள நிலையில் மேற்கண்ட இரு வகைகளும், பொதுவான தன்மைக்குள் அடங்கி விடுவதுபோல ‘பாத்ரூம் அட்டாச்டு டாய்லெட்’ கட்டமைக்கப்படுகிறது. அதாவது, ‘டாய்லெட் குளோசெட்’ மற்றும் குளியல் ‘‌ஷவர்’ ஆகியவை ஒரே இடத்தில் அமைக்கப்படும் முறை ‘வெட் டாய்லெட்’ (உலர் கழிவறை) என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது. அந்த இரண்டும் தனித்தனி பகுதிகளாக அமைக்கப்படும் பட்சத்தில் அது ‘டிரை டாய்லெட்’ (ஈர கழிவறை) என்று குறிப்பிடப்படும்.

பொதுவாக, குளியலறை தரைத்தள அமைப்பு வீட்டின் தரைத்தளத்தை விட 2 அல்லது 3 அங்குலம் தாழ்வாக அமைக்கப்படுவதே சிறப்பானது. அதன் காரணமாக பாத்ரூம் தண்ணீர் வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாது. மேலும், குளியலறையின் வாட்டம் கச்சிதமாக நீர் வெளியேறும் வகையில் இருப்பது முக்கியம். அவசியம் ஏற்படும் சமயங்களில் நீர் வெளியேற பொருத்தப்படும் ‘புளோர் டிராப்’ அதன் தரைமட்டத்தை விடவும் தாழ்வாக அமைக்க வேண்டும். சற்று அகலம் அதிகமான குளியலறையின் தேவை கருதி இரண்டு இடங்களில் கூட ‘புளோர் டிராப்’ அமைத்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்