வீடு–மனைகளின் ஆவண பதிவுக்கு தாய் பத்திரம் அவசியம்

வீடு–மனை உள்ளிட்ட சொத்துக்கள் மீதான ஆவண பதிவுக்கு சம்பந்தப்பட்ட மனை, இடம் அல்லது வீடு ஆகியவற்றின் முன் ஆவணம் (தாய்ப்பத்திரம் அல்லது மூலப்பத்திரம்) அவசியம் என்று சமீபத்தில் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

Update: 2018-07-27 22:30 GMT
வீடு–மனை உள்ளிட்ட சொத்துக்கள் மீதான ஆவண பதிவுக்கு சம்பந்தப்பட்ட மனை, இடம் அல்லது வீடு ஆகியவற்றின் முன் ஆவணம் (தாய்ப்பத்திரம் அல்லது மூலப்பத்திரம்) அவசியம் என்று சமீபத்தில் பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும், அத்தகைய மூலப்பத்திரங்கள் சார்–பதிவாளர் மூலம் சரிபார்க்கப்பட்டு, உறுதி செய்யப்பட்ட பின்னர் அதற்கான புதிய ஆவணங்கள் பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

வங்கி சான்றுகளும் முக்கியம்

பதிவுக்காக வரும் குறிப்பிட்ட சொத்து தொடர்பான மூலப்பத்திரங்கள் தொலைந்து போயிருக்கும் பட்சத்தில், அதன் பொருட்டு காவல்துறை அளித்த சான்றுகள் சரி பார்த்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மீது வங்கிக்கடன் பெற்றிருப்பது அல்லது அடமானம் வைத்திருப்பது போன்ற நிதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் அதன்பேரில் வங்கியால் அளிக்கப்பட்ட சான்றுகளை சரி பார்த்துக்கொள்ளவும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

பாகப்பிரிவினை சொத்துக்கள்

பொதுவாக, ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்ட பிறகு, அவர்களில் ஒருவரிடம்தான் தாய் பத்திரம் இருக்கும். எதிர்காலத்தில் தாய் பத்திரம் இல்லாதவர்கள், அவர்களது நிலம் அல்லது வீட்டை விற்பனை செய்யும் நிலையில், பல்வேறு காரணங்களால் தாய் பத்திரத்தை வைத்திருப்பவர் அவருக்கு கொடுக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. 

திருப்பி அளிக்கப்படும்

மேலும், நகர்ப்புறங்களில் உள்ள பல அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு ஒரு தாய் பத்திரம்தான் இருக்கும். மேற்கண்ட நிலைகளில் சொத்துக்கள் மீதான ஆவணப் பதிவிற்கு அசல் மூலப்பத்திரம் கொடுக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதர அனைத்து சொத்து பதிவுகளுக்கும் தாய் பத்திரம் என்ற மூலப்பத்திரம் அவசியமானது. மேலும், பதிவு அலுவலகத்தில் தாய் பத்திரம் சரிபார்க்க வாங்கப்படும் பட்சத்தில் அது சரி பார்க்கப்பட்டதற்கான குறிப்பு மற்றும் கையொப்பம் இடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். பொதுவாக, குறிப்பிட்ட சொத்துக்கான மூல பத்திரங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் ஆவணங்களை பதிவு செய்வது ஏற்கெனவே நடைமுறையில் 

இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்