சிமெண்டு வகைகளின் தர நிர்ணயம்

பொதுவாக, சிமெண்டு வகைகளுக்கான தர நிர்ணயம் என்பது அதன் நுண் தன்மையை (Fineness) சார்ந்து வகைப்படுத்தப்படுகிறது.;

Update:2018-08-04 13:53 IST
நன்றாக நுண்ணிய அளவில் அரைக்கப்பட்ட சிமெண்டு, நுண் தன்மை சற்று குறைவாக உள்ள சிமெண்ட்டை விடவும் விரைவில் நீரோடு சேர்ந்து வினைபுரிவதன் காரணமாக, தொடக்க நிலை உறுதியை (Initial strength) பெறுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

சிமெண்ட்டில் உள்ள நுண் தன்மையை கண்டறிய ‘பிளைன் கருவி’ (Blaine apparatus) மற்றும் சல்லடை பகுப்பாய்வு (Sieve analysis) ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

சிமெண்டுக்கான நுண் தன்மையை பொறுத்த வரையில் போர்ட்லேண்டு பொசலோனா வகைக்கு (PPC) நுண் தன்மைமையானது குறைந்த பட்சம் 300 Sq.M/Kg என்ற அளவிலும், ஆர்டினரி போர்ட்லேண்டு வகைக்கு (OPC) நுண் தன்மை குறைந்தபட்சம் 225 Sq.M/Kg என்ற அளவிலும் இருக்கவேண்டும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards) குறிப்பிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்