முறுக்கு கம்பிகள் மற்றும் டி.எம்.டி கம்பிகள்

கட்டுமான பணிகளுக்கு பயன்படும் இரும்பு கம்பிகள் சி.டி.டி (CTD - Cold Twisted Deformed) என்ற கம்பிகளாகவும், டி.எம்.டி அதாவது (TMT - Thermo Mechanical Treated) என்ற கம்பிகளாகவும் தயாரிக்கப்படு கின்றன.

Update: 2018-08-18 03:39 GMT
டி.எம்.டி முறையில் தயாரிக்கப்படும் கம்பிகள் வெப்ப குளிரூட்டு முறையில் சுமார் 1000 டிகிரி செல்சியஸ் அளவிலிருந்து 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைக்கப்பட்டு, பதப்படுத்தப்படுவதால் குறைந்த கார்பன் அளவு கொண்டதோடு, வலுவாகவும், துருவால் எளிதாக பாதிக்கப்படாத தன்மை கொண்டதாகவும் குறிப்பிடப்படுகின்றன.

பொதுவாக, கட்டுமான பணிகளில் சி.டி.டி முறை யில் தயாரிக்கப்பட்ட கம்பிகளை விடவும் டி.எம்.டி வகை கம்பிகள் அதிகமான பயன்பாட்டில் இருந்து வருகின்றன என்பதுகவனிக்கத்தக்கது. 

மேலும் செய்திகள்