கட்டுமான துறையினருக்கான தகவல் தொழில்நுட்ப மென்பொருள்

கட்டுமானத் துறையின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் பில்டிங் இன்பர்மேஷன் மாடலிங் (BIM) என்ற சாப்ட்வேர் மூலம் முப்பரிமாண முறையில் கட்டுமான திட்டங்களை தொடக்கத்திலேயே காண இயலும்.

Update: 2018-08-18 06:29 GMT
ஆர்க்கிடெக்சர், என்ஜினீயர் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வடிவமைப்பு, கட்டுமான படிநிலைகள், மூலப்பொருட்கள் மற்றும் பணியாளர் மேலாண்மை, உள்கட்டமைப்பு வசதி போன்ற பல நிலைகளிலும் துணை செய்வதாக உள்ளது.

பட்ஜெட் சார்ந்த கணக்கீடு

குறிப்பாக கட்டிட அமைப்புகளுக்கான விற்பனை, விலைப்புள்ளி தயாரிப்பு, அடக்க விலை கணக்கு, வடிவமைப்புகள். விளக்கங்கள் அளித்தல், உருவாக்குதல், நிறுவுதல், கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கலாம்.

மூலப்பொருட்கள் கணக்கீடு

கான்கிரீட்டை பயன்படுத்தி உருவாக்கப்படும் கட்டிட அமைப்புகளுக்கான கணக்கீடுகள் கச்சிதமாக இருப்பது அவசியம். பல்வேறு காரணங்களுக்காக கட்டுமான பொருள்களில் மாற்றம் செய்ய வேண்டிய சூழலில் உடனடியாக அதற்கேற்ற கணக்கீடுகளை செய்து செயல்படுத்தலாம். கடந்த 12 ஆண்டுகளுக் கும் மேலாக இந்த கணினி ஆணைத் தொகுப்புகளின் பயன்பாடு உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டுமான நிறுவனங்களுக்கு பெரிதும் பயனளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக மேலாண்மை


மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமானத்தின் அமைப்பின் பகுதிகளுக்கான அனைத்து விளக்கங்களையும் அளிப்பதற்கும், பணிகளுக்கான வரையறை மற்றும் அதற்கான கால அளவு ஆகிய விஷயங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். கட்டுமானம் பற்றிய அனைத்து தகவல்களையும் வேண்டிய இடங்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முடிவதுடன், தவறுகள் ஏதும் இல்லாமல் அனைத்து வேலைகளையும் தடங்கலின்றி கச்சிதமாக செய்வதற்கும் உதவியாக இருக்கும். பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளும்போது நிர்வாக ரீதியான மாற்றங்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய சமயங்களில், கட்டுமான மேலாண்மை விஷயங்களில் எளிதாக மாற்றங்களையும் இதன் மூலம் மேற்கொள்ள இயலும். 

மேலும் செய்திகள்