அறைகளுக்குள் அழகு செடிகள் வளர்ப்பு

அழகு மற்றும் வாஸ்து காரணங்களுக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடிகள் பல விதங்களிலும், நிறங்களிலும் இருக்கின்றன.

Update: 2018-08-24 21:30 GMT
ழகு மற்றும் வாஸ்து காரணங்களுக்காக வீடுகளில் வளர்க்கப்படும் செடிகள் பல விதங்களிலும், நிறங்களிலும் இருக்கின்றன. தொட்டிகளில் வளரும் செடிகள் வைக்கப்படும்  இடத்தின் சூழ்நிலையை பசுமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றியமைக் கின்றன. 

அவை காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கி, பிராண வாயுவை சூழலில் பரவச்செய்யும் வேலையை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. அதனால் துளசி, வெற்றிலை, திருநீற்று பத்திரி உள்ளிட்ட மற்ற ‘குரோட்டன்ஸ்’ வகை செடிகளை அழகிய தொட்டிகளில் வைத்து வீட்டை அழகாக மாற்றலாம். 

சில பசுமையான செடி வகைகளை மேற்கூரை யிலிருந்து தொங்கும்படியாக அமைப்பது ஒரு வகை அழகாக இருக்கும். வீட்டுக்குள் அலங்கார தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது மனதிற்கு இதமாக இருப்பதோடு, வீட்டுக்குள் பிராண வாயு எளிதாக பரவ வாய்ப்பாகவும் அமையும். பூச்செடிகளுக்கு ஓரளவாவது சூரிய ஒளி வேண்டும் என்பதால் அவற்றை வாரம் ஒருமுறையாவது வெயிலில், 5 அல்லது 6 மணி நேரம் வைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்