மனதில் உள்ள கனவு வீட்டை முன்கூட்டியே பார்க்கலாம்

மனதில் உள்ள கனவு வீட்டை வடிவமைப்பதற்கு முன்னதாகவே அந்த வீட்டிற்குள் சென்று பார்க்கும் அனுபவத்தை இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி சாத்தியமாக்கி உள்ளது.

Update: 2018-08-24 22:00 GMT
னதில் உள்ள கனவு வீட்டை வடிவமைப்பதற்கு முன்னதாகவே அந்த வீட்டிற்குள் சென்று பார்க்கும் அனுபவத்தை இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி சாத்தியமாக்கி உள்ளது. வித்தியாசமான அனுபவமாக இருக்கக்கூடிய அந்த அனுபவத்தை அறிவியலின் துணையோடு பூர்த்தி செய்யக்கூடிய தொழில் நுட்பம் (
Virtual Reality
) பல உலக நாடுகளில் பரவ லாக இருந்து வருகிறது. 

கட்டுமான திட்ட விளக்கம்

பொதுவாக, வீட்டுக்கான கட்டமைப்புகள் பற்றி குறிப்பிடும் பிளான்கள் படங்களாகவும், வரி வடிவம் கொண்டதாகவும் தயார் செய்யப்படுவது வழக்கம். பொறியியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக முப்பரிமாண தோற்றத்தில் வீடுகளுக்கான மாதிரிகள் அமைப்பதும் நடைமுறைக்கு வந்தது. 

மெய்நிகர் காட்சி

அதன் அடுத்த கட்ட நீட்சியாக கணினி உலகில் ‘பிளானர் 5டி’ போன்ற மென்பொருள்கள் மூலமாக ஒரு நிறுவனம் அல்லது கட்டுனரால் மேற்கொள்ளப்பட இருக்கும் கட்டுமான திட்டத்தை மெய்நிகர் காட்சி முறைப்படி ‘virtual Reality Headset
’ மூலம் வாடிக்கையாளர்கள் காண இயலும். 

கண்களோடு பொருத்தும் திரை

அதாவது, கட்டப்படாத உங்கள் கனவு இல்லத்திற்குள் நுழைந்து வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட இந்த தொழில்நுட்பம் வழி காட்டுகிறது. இந்த வகை மெய்நிகர் காட்சித் திரை தொழில் நுட்பம் உலகின் அனைத்து பகுதிகளிலும் புகழ் பெற்றுள்ளது. கண்களோடு எளிதாக பொருத்தி கொள்ளும் வசதி கொண்ட அதன் திரை அமைப்பின் மூலம் கட்டப்படாத வீட்டின் அனைத்து அறைகளையும் பார்ப்பதுடன், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மூலம் அருகில் இருப்பவர்களும் அந்த காட்சிகளை காண முடியும். 

360 டிகிரி பார்வை

வீடியோ விளையாட்டுகளை கணினி திரை மூலம் பார்ப்பவர்கள் நிஜமாகவே அங்கு இருப்பது போன்ற மாயக்காட்சி ஏற்படும். அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே கனவு வீடுகளை மாயக்காட்சியாக காணும் மேற்கண்ட தொழில் நுட்பம் செயல்படுகிறது. அந்த கருவியை கண்களில் பொருத்திக்கொண்டு திரை வழியே பார்க்கும் பொழுது, வீட்டிற்குள் மானசீகமாக நுழைந்து அனைத்து பகுதிகளையும் சகல கோணங்களிலும் பார்க்கலாம். 

மாற்றங்கள் சுலபம்

அவ்வாறு பார்க்கும்போது, அறைகளுக்கான உள் கட்டமைப்புகள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வைக்க வேண்டிய விதம் போன்றவற்றில் தேவையான அமைப்புகள் அல்லது மாற்றங்கள் ஆகியவற்றை குறித்துக்கொண்டு, அதற்கேற்ப செய்து கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்