விருந்தினர்களை கவரும் ஹால் சுவர் வண்ணம்

வீட்டின் ஹால் அல்லது வரவேற்பறையில் அமர வைக்கப்படும் விருந்தினர்கள் உள்ளிட்ட புதியவர்கள் மனம் கவரும் வகையில் அந்த அறைகளின் சுவர் பெயிண்டிங் முறையில் வித்தியாசம் காட்டுவது இன்றைய நாகரிக சூழலில் பரவலாக உள்ள ‘பே‌ஷன்’ ஆகும்.

Update: 2018-09-07 21:30 GMT
வீட்டின் ஹால் அல்லது வரவேற்பறையில் அமர வைக்கப்படும் விருந்தினர்கள் உள்ளிட்ட புதியவர்கள் மனம் கவரும் வகையில் அந்த அறைகளின் சுவர் பெயிண்டிங் முறையில் வித்தியாசம் காட்டுவது இன்றைய நாகரிக சூழலில் பரவலாக உள்ள ‘பே‌ஷன்’ ஆகும். 

பொதுவாக, அனைவரும் உபயோகப்படுத்தும் அறைகளுக்கு சற்று அடர்த்தியான நிறம் கொண்ட சுவர் பெயிண்டிங் செய்யப்படுவது ஒரு முறையாக உள்ளது. அதன் காரணமாக, மின் விளக்கு வெளிச்சத்தில் அந்த அறை கச்சிதமான அளவு கொண்டதாகவும், கண்ணை உறுத்தாத ஒளி அமைப்பிலும் இருக்கும். 

அடர்த்தியான நிறம் என்பது பலருக்கும் பிடிப்பதில்லை என்ற அடிப்படையில், நான்கு பக்க சுவர்களில் ஒரு பக்கம் மட்டும் வெளிர் நிறத்தில் பெயிண்டிங் செய்வது அல்லது மூன்று பக்க சுவர்களுக்கு வெளிர் நிறமும், ஒரு பக்கம் அடர்த்தியான நிறத்திலும் பெயிண்டிங் செய்வதும் புதிய ‘டிரெண்டாக’ இருந்து வருகிறது. அதன் காரணமாக, ஹால் நன்றாக பளிச்சென்று காட்சி அளிப்பதோடு, அளவில் பெரியதாவும் தோற்றமளிக்கும்.

மேலும் செய்திகள்