மின் சாதன பொருட்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களும் மின்சாரம் மூலமே இயங்குகின்றன. அவற்றின் 3 பின் பிளக்குகள் வழியாக வீட்டின் மின்சார போர்டுகள் மூலம் மின் இணைப்பு தரப்படுகிறது.

Update: 2018-10-05 22:00 GMT
ன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களும் மின்சாரம் மூலமே இயங்குகின்றன. அவற்றின் 3 பின் பிளக்குகள் வழியாக வீட்டின் மின்சார போர்டுகள் மூலம் மின் இணைப்பு தரப்படுகிறது. அவ்வகையான பிளக்குகளில் உள்ள முதலாவது பெரிய பின் ‘எர்த்’ அமைப்பாகும்.

எர்த் அமைப்பு நடைமுறையில் இல்லை

பழைய முறைப்படி மின் சாதனங்களுக்கான ‘எர்த்’ நிலத்தில் கொடுக்கப்படும் முறை இப்போது பெரும்பாலும் வழக்கத்தில் இல்லை. அடுக்குமாடி வாழ்வில் ‘எர்த்’ கொடுக்கும் முறை சிரமமானது. அதனால், குடும்ப அங்கத்தினர்களின் பாதுகாப்புக்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வீடுகளிலும் செயல்படுத்துவது முக்கியம்.

‘எர்த் லூப் வோல்டேஜ் டிடெக்டர்’

மேற்கண்ட ‘எர்த்’ சிக்கல்களை தீர்க்கும் விதத்தில் இ.எல்.வி.டி (earth loop voltage detector) என்ற அமைப்பு பயன்பாட்டில் இருந்து வருகிறது. வீட்டு உபயோக பொருட்களின் மின்சார பயன்பாட்டுக்கு ஏற்ப, வெவ்வேறு வடிவங்களில் அவை சந்தையில் கிடைக்கின்றன. வீடுகளுக்கு இரண்டு வித இ.எல்.வி.டி அமைப்பே போதுமானது.

‘எர்த் லீக்கேஜ் சர்க்கியூட் பிரேக்கர்’

மேலும், இ.எல்.சி.பி. (earth leakage circuit breaker)  என்ற அமைப்பும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வாட்டர் ஹீட்டர், கிரைண்டர், மிக்சி, அயர்ன்பாக்ஸ் ஆகிய மின்சார சாதனங்களுக்கான மின்சார இணைப்புகளில் மேற்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைத்து குடும்ப அங்கத்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்