கிருமிகள் பாதிப்பை தடுக்கும் நவீன பெயிண்டு

சுவரின் உறுதியை பாதிப்படைய வைக்கும் பல்வேறு காரணிகளில் ஈரப்பதத்தை கவனிக்கத்தக்க ஒன்றாக பொறியியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Update: 2018-10-13 07:38 GMT
அதனால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க சுவர்களுக்கான மேற்பூச்சு வகைகளை கச்சிதமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும், சுவர்களில் பூஞ்சைகள், ஈரப்பதம், விரிசல்கள் உள்ளிட்ட சிக்கல்களை கட்டுப்படுத்த ஏற்ற பெயிண்டு வகை (Antibacterial and Antifungal Polymeric Paint) பற்றியும் அவர்கள் தரும் தகவல்களை இங்கே காணலாம்.

நவீன வகை பெயிண்டு

மழை மற்றும் குளிர் காலங்களில் கட்டிடங்களின் வெளிப்புற சுவர்கள் எளிதாக பாதிப்படைந்து விடுவதுடன், அவற்றின் மேற்புறத்தில் உள்ள பெயிண்டு பூச்சும் பல்வேறு மாற்றங்களை அடைகிறது. அவற்றை எதிர்கொள்ளும் வகையில் சுவர்களுக்கான நவீன பெயிண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு வகை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

பல வகைகள்

தற்போது உபயோகத்தில் உள்ள பெயிண்டு வகைகளில் காரீயம் கலக்கப்பட்டது அல்லது காரீயம் கலக்காதது என்ற இரு வகைகள், வி.ஓ.சி பெயிண்டு மற்றும் நானோ பெயிண்டு என்று பல்வேறு விதங்களில் உள்ளன. அவற்றில் நமக்கு தேவையான தொழில்நுட்பம் கொண்டவற்றை தேர்வு செய்து பயன்படுத்தி சுவர்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

புதிய அறிமுகம்

மேற்கண்ட பெயிண்டுகள் வரிசையில் ‘மைக்ரோபைசிடல்’ (Microbicidal Paint) என்ற வகை சென்ற ஆண்டு அறிமுகமாகி பல நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பெயிண்டு உடல் நலம் மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்று அதன் தயாரிப்பாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை கட்டுமானங்களுக்கும் ஏற்றதாக சொல்லப்படும் இவ்வகை 2017-ம் ஆண்டின் சிறந்த இன்டிரியர் பெயிண்டாக குறிப்பிடப்பட்டது கவனிக்கத்தக்கது.

நூற்றுக்கணக்கான நிறங்கள்

குறிப்பாக, இவ்வகை பெயிண்டு வெகு விரைவில் உலரக்கூடியதாகவும், நுண்ணுயிர்களால் உண்டாகும் பாதிப்புகளை தடுக்க வல்லது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய தன்மைகளை கொண்ட ‘மைக்ரோபைசிடல்’ பெயிண்டு கிட்டத்தட்ட 550 வகையான நிறங்களில் தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கிறது. 

மேலும் செய்திகள்