ஆவண பதிவில் வெளிநாட்டு இந்தியருக்கான நடைமுறை

அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டவர் இங்கே வீடு, மனை அல்லது நிலம் போன்ற சொத்துக்களை வாங்க விரும்பும் நிலையில், நேரில் வந்து பத்திர பதிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டியதாக இருக்கும்.

Update: 2018-10-27 00:15 GMT
அவ்வாறு நேரில் வர இயலாத சூழலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பதிவுத்துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை காணலாம். 

பத்திர பதிவு சமயத்தில் பதிவு அலுவலர் முன்னர் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர் நேரிடையாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது முறை. ஆனால், வெளிநாட்டிலிருந்து அவ்வாறு வர இயலாதவர்கள், அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட நபர் மூலம் பத்திரப் பதிவை பூர்த்தி செய்ய இயலும். 

அதற்கு, சம்பந்தப்பட்ட நாட்டின் இந்தியத் தூதரக அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்ட அதிகார ஆவணம் தயார் செய்யப்பட்டு இங்கே உள்ள மாவட்டப் பதிவாளர், சார்–பதிவாளரிடம் அத்தாட்சி செய்யப்பட்டதன் அடிப்படையில் அதிகாரமளிக்கப்பட்ட நபர் மூலம் பத்திரப் பதிவை செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்