கூடுதலாக வீட்டு கடன் பெற உதவும் திட்டம்

விண்ணப்பதாரரின் எதிர்கால வருமானம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, வீட்டு கடன் வசதி நிறுவனங்களால் கூடுதல் கடன் தொகை அளிக்கப்படும் முறை ஸ்டெப் அப் வீட்டு கடன் ஆகும்.

Update: 2018-11-10 09:13 GMT
 இதன் மூலம் 5 முதல் 30 சதவீதம் வரை அதிக தொகை பெறலாம். இவ்வகை கடன் திட்டத்தில் வட்டி விகிதம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கேற்ப மாறுபடுவதுடன் மாதாந்திர தவணை துவக்கத்தில் குறைவாக இருந்து காலம் செல்லச் செல்ல அதன் அளவு படிப்படியாக அதிகரிக்கும். அதாவது, வருடா வருடம் உயரும் ஊதியத்திற்கேற்ப திருப்பி செலுத்தும் அளவும் அதிகமாக கணக்கிட்டு பெறப்படும்.

எதிர்காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் என்று நம்பக்கூடிய துறையில் பணி புரியும் இளைய சமூகத்தினரின் சொந்தவீடு கனவை நிறைவேற்ற இவ்வகை கடன் திட்டங்கள் உதவுகின்றன.

பொதுத்துறை வங்கிகள் முழுமையான ஸ்டெப் அப் வீட்டு கடன் அளிக்க முன் வருவதில்லை. ஆனால், கடன் தொகையை ஸ்டெப் அப் முறையில் கடனை படிப்படியாக அதிகரித்து திரும்ப செலுத்தும் (StepUp Re-payment Facility) வசதியை அளிக்கின்றன. 

மேலும் செய்திகள்