இருப்பில் உள்ள கட்டுமான பொருட்களின் பயன்பாடு

கட்டுமான பணிகளில் வெவ்வேறு தன்மை கொண்ட பொருட்களை வாங்கி தக்க முறையில் இருப்பு வைத்து பயன்படுத்துவது அவசியம் என்ற நிலையில் அவற்றின் பயன்பாடுகள் பற்றி கட்டுமான பொறியாளர்கள் தெரிவிக்கும் முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம்.

Update: 2018-11-10 09:29 GMT
கட்டுமான பணிகளில் எந்தவிதமான பொருட்கள் எவ்வளவு பயன்படுத்தப்படுகின்றன, அதன் பின்னர் மீதம் உள்ள பொருட்களின் அளவு மற்றும் நிலை என்ன என்பது பற்றி கச்சிதமாக கணக்கிட்டு செயல்படுவதன் மூலம் செலவினங்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்த இயலும் என்பது அறியப்பட்டுள்ளது.

கட்டிட பணிகள் மற்றும் அவை சார்பான இதர தேவைகளுக்காக சேமிப்பு கிடங்கில் உள்ள பொருட்களை, அவை வைக்கப்பட்ட நாளை கணக்கிட்டு தக்க விதத்தில் பயன்படுத்தும் முறையாவது :

1) முதலில் வந்தது முதலில் (First In First Out- FIFO)

2) முதலில் வந்தது கடைசியில் (First In Last Out- FILO)

3) கடைசியில் வந்தது முதலில் (Last In First Out- LIFO)

4) கடைசியில் வந்தது கடைசியில் (Last In Last Out -LILO)

மேற்கண்ட நான்கு முறைகளின் அடிப்படையில் கட்டுமான பணிகளுக்கு தேவைப்படும் பொருட்களை திட்டமிட்டு கையாள்வது முக்கியம். அதன்படி சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றையும் மேற்கொள்வது பல நன்மைகளை அளிக்கும்.

சேமிப்பில் உள்ள பொருட்கள் எப்போது தீரும், மறுபடியும் எப்போது வாங்கி இருப்பு வைக்க வேண்டும் என்ற விஷயங்கள் மேற்கண்ட பார்முலாவை பொறுத்து மேற்கொள்ளலாம். சில நேரங்களில் இருப்பில் இருப்பதை முதலில் தீர்த்துவிட்டு பிறகு புதிதாக வாங்க வேண்டிய நிலையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கொள்முதல் செய்யப்படும் பொருட்களை பத்திரமாக இருப்பு வைக்க வேண்டியது முக்கியம். இருப்பில் இருக்கும்போது பாதிக்கப்படாமலும், நீண்ட காலம் வைத்திருக்கும் நிலையிலும் பயன்படுத்த ஏற்றதாக உள்ள பொருட்களையே இருப்பில் வைக்கவேண்டும்.

சில தயாரிப்பு பொருட்களை இருப்பு வைக்கும் காலம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவற்றின் உத்திரவாதம் காலாவதியாகி விடும் சூழலில், அவற்றின் தன்மை, ஆயுள்காலம், இருப்பு வைக்கும் நிலை, அவற்றின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கண்ட பார்முலாவானது பயன்படுத்த ஏற்றது என்று கட்டுமான பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்