தானப் பத்திரம் குறித்த தகவல்கள்

குறிப்பிட்ட ஒருவரிடம் இருக்கக்கூடிய வீடு-மனை உள்ளிட்ட சொத்துக்களை தானப்பத்திரம் மூலம் நெருங்கிய குடும்ப உறவினர்களுக்கு உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

Update: 2018-11-10 09:34 GMT
அவ்வாறு தானப்பத்திரம் மூலம் சொத்து உரிமை மாற்றம் செய்யப்படுவது விற்பனை என்று குறிப்பிடப்படுவதில்லை.

இந்த முறையில், சொத்தை தானமாக பெற்றவர் அவரது நெருங்கிய உறவினருக்கு அதை தானமாகவும் அளிக்கலாம். முத்திரைத் தாள் கட்டணம் இல்லாமல் இவ்வகை பத்திர பதிவை செய்து கொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழி காட்டி மதிப்பில் ஒரு சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் மற்றும் பதிவு கட்டணம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்