சமையலறைக்கு அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள்

சமையலறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

Update: 2018-11-17 10:26 GMT
தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஏற்படக்கூடிய தீ சம்பந்தமான பாதிப்புகளில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்துக்கும் மேலாக சமையலறையிலிருந்து பரவுவதாக அறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சமையலறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

செல்போன் பயன்பாடு

சமையல் பணிகளை கவனிக்க கியாஸை திறந்து விட்ட பிறகு, வரக்கூடிய செல்போன் அழைப்பு காரணமாக கவனம் திசை திரும்புவதால் பிரச்சினைகள் வரலாம். அதனால் சமையல் பணிகளின்போது செல்போன் பேசவேண்டிய சூழலில், எரிவாயு இணைப்பை அணைத்துவிடுவது பாதுகாப்பானது.

கியாஸ் உபயோகம்

கியாஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் நிலையில், பாத்திரங்களை மாற்றுவது தவறானது. குறிப்பாக, அந்த நிலையில் எண்ணெய் அடங்கிய வாணலிகள் வைக்கப்படுவது, அல்லது எடுக்கப்படுவது கூடாது. அடுப்பு அணைக்கப்பட்ட பின்னர் மேற்கண்ட செயல்களை செய்வது நல்லது.

வாசனை பொருட்கள்

சமையலறைகளில் அதிகமான வாசனை வீசும் பொருட்களை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். காரணம், எதிர்பாராதவிதமாக கியாஸ் கசிவு ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக உணருவதில் சிக்கல்கள் உண்டாகலாம்.

வெளிப்புற ‘ஸ்விட்ச்’ அமைப்பு

சமையலறைகளுக்கான மின்சார ‘ஸ்விட்ச்’ அமைப்புகளில் ஒன்றிரண்டை தவிர மற்றவை வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் காரணமாக பல சிக்கல்கள் தவிர்க்கப்படும் என்று பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.

வெப்பக்காற்று வெளியேற்றம்

சமையல் பணிகள் முடிவடையும் வரை ‘எக்ஸ்ஹாஸ்ட் பேன்கள்’ தொடர்ச்சியாக இயங்கி உள்ளிருக்கும் வெப்ப காற்றை வெளியேற்றும் விதமாக செயல்பட்டுக்கொண்டிருப்பது அவசியமானது.

‘மாடுலர் கிச்சன்’ வசதிகள்

மின்சாரம் மற்றும் நெருப்பு போன்றவற்றால் பெரிய அளவில் பாதிக்கப்படாத ‘மாடுலர் டைப் கிச்சன்’ அமைப்பு சமையலறையில் செய்யப்பட்டிருப்பது பலவிதங்களில் பாதுகாப்பை அளிக்கும்.

மேலும் செய்திகள்