மனைப்பிரிவு அமைந்துள்ள மண்டலம்

எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு நகரத்துக்கான மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கப்படும் நிலையில் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.;

Update:2018-12-01 13:39 IST
திர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஒரு நகரத்துக்கான மாஸ்டர் பிளான்கள் தயாரிக்கப்படும் நிலையில் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அவை வெவ்வேறு உபயோகங்கள் கொண்ட தனித்தனி மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.

அதாவது, குடியிருப்பு பகுதிகள், குடியிருப்பு-வர்த்தகம் ஆகியவை கலந்த மிக்ஸ்டு ஏரியா, தொழிற்சாலை பகுதி, பொழுதுபோக்கு வசதிகள், திறந்தவெளி மற்றும் நகர்ப் புறமல்லாத மண்டலங்கள் என்று பிரிவு செய்யப்பட்டிருக்கும்.

எனவே, ஒரு பகுதியில் வீட்டு மனை வாங்கும்போது, மேற்கண்ட விஷயங்களை கவனித்து மனை குடியிருப்பு மண்டலத்தில் உள்ளதை அறிந்து கொண்டு வாங்க வேண்டும். இல்லாவிட்டால் உள்ளாட்சி அமைப்பு வீடு கட்ட அனுமதி தர மறுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் செய்திகள்