உள் அலங்கார முறைகளுக்கான பட்ஜெட் கணக்கீடு

வீடுகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகளுக்கான ‘இன்டீரியர்’ அலங்காரம் செய்ய இப்போதுள்ள சந்தை நிலவரத்தில் என்ன பட்ஜெட் ஆகும் என்ற கேள்விக்கு வல்லுனர்கள் பதில் தந்துள்ளனர்.

Update: 2018-12-28 22:00 GMT
வீடுகள் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகளுக்கான ‘இன்டீரியர்’ அலங்காரம் செய்ய இப்போதுள்ள சந்தை நிலவரத்தில் என்ன பட்ஜெட் ஆகும் என்ற கேள்விக்கு வல்லுனர்கள் பதில் தந்துள்ளனர். சென்னை போன்ற பெருநகர நிறுவனங்கள் பல்வேறு ‘இன்டீரியர் எஸ்டிமே‌ஷன்’ அளிக்கின்றன. பல தனி நபர்களும் ‘லேபர் கான்ட்ராக்ட்’ முறையில் இன்டீரியர் வேலைகளை குறைவான பட்ஜெட்டில் செய்து தருகிறார்கள். 

நிபுணர்கள் கருத்துப்படி கட்டமைப்புகளின் ‘கார்பெட் ஏரியா’ அளவுக்கேற்ப ‘இன்டீரியர் பட்ஜெட்’ கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் ‘கார்பெட் ஏரியா’ அளவுடன் ரூ.1000 என்ற தொகையை பெருக்கினால் வரும் விடையை தோராயமான மொத்த இன்டீரியர் செலவாக கொள்ளலாம். 

அதாவது, 1000 சதுர அடி கொண்ட வீட்டின் ‘கார்ப்பெட் ஏரியா’ சராசரியாக 850 சதுர அடியாக இருக்கலாம். 850 உடன் 1000 என்ற எண்ணை பெருக்கி வரும் விடையான 8,50,000 என்பது தோராயமான மொத்த இன்டீரியர் பட்ஜெட் தொகை ஆகும். கூடுதல் சவுகரியங்கள் மற்றும் உயர்தர மூலப்பொருட்கள் போன்ற காரணங்களால் மொத்த பட்ஜெட் கூடுதலாக அமையவும் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் செய்திகள்