வாடகையை நிர்ணயம் செய்ய உதவும் கட்டிட மதிப்பீடு

நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்ய கட்டிட மதிப்பீடு பயன்படுகிறது.

Update: 2018-12-28 22:00 GMT
கர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வர்த்தக கட்டிடங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்ய கட்டிட மதிப்பீடு பயன்படுகிறது. அத்தகைய மதிப்பீட்டில் முதலில் கட்டமைப்பின் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. பின்னர், அந்த மதிப்பை வாடகையின் மூலம் எத்தனை ஆண்டுகளில் பெற முடியும் என்ற கணக்கீட்டுடன் ஒப்பிட்டு முடிவு செய்யப்படும்.

அதன் அடிப்படையில் சொத்து மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஆண்டு வருவாய் என்று கணக்கிட்டு, அதிலிருந்து மாத வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. அவற்றில் சொத்து மதிப்பை நிர்ணயம் செய்ய மாநில அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும் கட்டிட செலவு தொகை கணக்கில் கொள்ளப்படும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்ட இதர வர்த்தக நிறுவனங்களுக்கு தங்களது கட்டிடங்களை வாடகைக்கு அளிக்கும் தனிநபர்கள் தக்க மதிப்பீட்டாளரின் சான்றிதழ் பெற்று கச்சிதமான வாடகையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். 

மேலும் செய்திகள்