வீட்டின் கட்டுமான பணியில் மொத்த பட்ஜெட் கணக்கீடு

சொந்தமாக வீடு கட்ட முயற்சிப்பவர்கள் அதற்கான மொத்த பட்ஜெட் பற்றித்தான் முதலில் கணக்கிடுவார்கள்.

Update: 2019-05-10 22:45 GMT
இன்றைய விலைவாசியில் திட்டமிடப்படும் காலத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் விலை நிலவரமும், வீட்டின் கட்டுமான பணி முடிவடையும் காலகட்டத்தில் உள்ள விலை நிலவரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓரிரு பொருட்கள் விலை குறைவதுபோல இருந்தாலும், இதர பொருட்களின் விலை உயர்ந்து அதை ஈடு செய்வதுபோல அமைந்து விடுவதை பலரும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறார்கள்.

பொதுவாக, வீட்டு கட்டுமான பணிக்கான மொத்த பட்ஜெட் தொகையை விட சுமார் 15 சதவிகிதம் கூடுதலாக செலவு ஆகலாம் என்ற கணக்கீட்டை கட்டுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்கள் சொந்தமாக வீடு கட்டும் மக்களின் வசதிக்காக கட்டுமான பணிகளுக்கான செலவினங்களை 10 வகைகளாக பிரித்து, அவற்றின் செலவு பற்றிய விபரங்களை சதவிகித கணக்கில் குறிப்பிட்டுள்ளார்கள். அவை பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு ஒரு தோராயமான அளவுதான் என்பதையும், கட்டுமான யுக்திகள் உள்ளிட்ட இதர கட்டமைப்புகள் மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் இவற்றில் மாற்றங்கள் இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

வீட்டின் கட்டுமான பணிக்கான உத்தேச பட்ஜெட் ரூ.10 லட்சம் என்ற அடிப்படையில், அதற்கான செலவுகள் சதவிகித அடிப்படையில் கீழே தரப்பட்டுள்ளன.

1. அஸ்திவார தோண்டும் பணிகள் ரூ. 30,000 ( 3 % )

2. அஸ்திவார கட்டுமானம் ரூ.1,00,000 ( 10 % )

3. பேஸ்மெண்டு வரை செங்கல் சுவர் ரூ. 50,000 ( 5 % )

4. மேல் கூரை வரை செங்கல் சுவர் ரூ.2,00,000 ( 20 % )

5. மேல்தளம் அமைப்பு ரூ.2,00,000 ( 20% )

6. தரைத்தள டைல்ஸ் ரூ.1,00,000 ( 10% )

7, கதவு, ஜன்னல், மர வேலைகள் ரூ.2,00,000 ( 20% )

8. உட்புற, வெளிப்புற அலங்கார பணி ரூ. 50,000 ( 5 % )

9. மின்சார இணைப்புகள் ரூ. 50,000 ( 5 % )

10. குடிநீர் வசதிகள் ரூ. 20,000 ( 2 % )

மொத்தம் ரூ. 10,00,000

மேலும் செய்திகள்