கான்கிரீட் கலவையில் உள்ள குறைகளை கண்டறியும் கருவி

கட்டுமான அமைப்புகளுக்கு அத்தியாவசியமான கான்கிரீட் கலவையில் உள்ள ஈரப்பதம் மற்றும் அதில் கலந்துள்ள இதர ரசாயனங்கள், அதன் உள்ளீடுகள் மற்றும் கலக்கப்பட்டுள்ள விகிதங்கள், அமிலத்தன்மை போன்றவற்றை துல்லியமாகக் கணக்கிடுவதற்கு ‘சிமெண்டோ மீட்டர்’ என்ற கருவி பயன்படுகிறது.

Update: 2019-05-24 22:30 GMT
ட்டுமான அமைப்புகளுக்கு அத்தியாவசியமான கான்கிரீட் கலவையில் உள்ள ஈரப்பதம் மற்றும் அதில் கலந்துள்ள இதர ரசாயனங்கள், அதன் உள்ளீடுகள் மற்றும் கலக்கப்பட்டுள்ள விகிதங்கள், அமிலத்தன்மை போன்றவற்றை துல்லியமாகக் கணக்கிடுவதற்கு ‘சிமெண்டோ மீட்டர்’ என்ற கருவி பயன்படுகிறது. சாதாரண டி.வி ரிமோட்டுக்கு போடப்படும் பேட்டரி மூலம் இது இயங்கும். எடை சுமார் 200 கிராம் இருக்கலாம். 

இந்தக்கருவி மூலம் கான்கிரீட்டின் தரம், உறுதி ஆகியவற்றை எளிதாக வரையறை செய்து கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம். மேலும், கலவையில் உள்ள சிமெண்டு மற்றும் தண்ணீர் அளவு ஆகியவற்றின் விகிதாச்சாரத்தை இதன் மூலம் கண்டறிந்து, அதில் உள்ள தவறுகளை 

சரி செய்து கொள்ளலாம். சிமென்டோ மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள டைப்–ஆர் மற்றும் டைப்–எல்  என இரு பகுதிகள் செயல்படும் விதம் பற்றி இங்கே காணலாம்.

‘டைப் ஆர்’ 

இந்த பகுதியில் கான்கிரீட் கலவைக்கு அடிப்படையான தண்ணீர், சிமெண்டு விகிதம் பற்றிய குறைகள் சுட்டிக்காட்டப்படும். அனுமதிக்கப்பட்ட விகிதமான 0.35 முதல் 0.65 என்ற விகிதத்தை விட தண்ணீர்–சிமெண்டு கலவை அளவு அதிகமாக இருக்கும் நிலையில் அதில் உள்ள சிவப்பு நிற எழுத்துக்கள் ஒளிர்ந்து அதை சுட்டிக்காட்டும்.  

‘டைப் எல்’

இந்த பகுதியானது கலவையில் உள்ள ரசாயனங்கள், அமிலம் மற்றும் காரம் ஆகியவற்றின் தன்மை பற்றி சுட்டிக்காட்டும். அதாவது, அனுமதிக்கப்பட்ட விகிதமான 0.2 முதல் 0.4 வரை உள்ள அளவுகளுக்கும் அதிகமாக அவை இருந்தால், கருவியில் உள்ள சிவப்பு நிற எழுத்துக்கள் ஒளிர்ந்து அந்த குறை பற்றி தெரிவிக்கும்.

மேலும் செய்திகள்