கட்டிட விரிவாக்க பணிகளில் ஆலோசனை அவசியம்

பெருநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள பழைய கட்டிடங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யும் சூழல் ஏற்படலாம்.

Update: 2019-07-05 22:30 GMT
பெருநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள பழைய கட்டிடங்களில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யும் சூழல் ஏற்படலாம். அதுபோன்ற சமயங்களில் கட்டிட உரிமையாளர்கள் பல்வேறு வி‌ஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். 

சென்னை போன்ற நகரங்களில் கிட்டத்தட்ட 35 முதல் 60 ஆண்டுகள் வயது கொண்ட குடியிருப்புகள் பரவலாக அமைந்துள்ளன. அவற்றின் சுவர்கள் பெரும்பாலும் கட்டிடத்தின் பாரத்தை தாங்கி நிற்கும் வகையில் இருப்பது அறியப்பட்டுள்ளது. கூடுதல் விரிவாக்கம் காரணமாக அதிகரிக்கும் எடையை அந்த சுவர்கள் தாங்கும் நிலையில் உள்ளனவா என்பதை கட்டுமானப் பொறியாளர்கள் மூலம் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும்.

வீடு அல்லது குடியிருப்பு அமைந்துள்ள மனைப்பகுதியின் மண் அடுக்கு அமைப்பு, அடித்தள அமைப்பு, அகலம், சுவர்களின் கனம், அதன்மீது அமைக்கப்பட்டுள்ள பூச்சு வகை, கட்டிட பராமரிப்புகள் ஆகிய தகவல்களின் அடிப்படையில் கூடுதல் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், விரிவாக்க பணிகளில் கட்டமைக்கப்படும் கூரை பற்றிய தகவல்கள் கணக்கில் கொள்வது முக்கியம். அவற்றின் அடிப்படையில் சுவர்களின் பளு தாங்கும் தன்மை கணக்கிடப்படும். அதன் முடிவில் கட்டுமானப் பொறியாளருக்கு திருப்தி ஏற்படாத நிலையில், அடித்தளம் அகலப்படுத்துவது, தரைத்தளச் சுவரை உறுதியாக அமைத்தல் ஆகிய பணிகளை செய்த பின்னரே கூடுதல் கட்டமைப்பு அமைக்க அவரால் ஒப்புதல் அளிக்கப்படும்.

மேலும் செய்திகள்