பில்லர் இரும்பு கம்பிகளின் துருவை அகற்றும் முறை

கட்டுமான பணிகளின்போது எதிர்கால கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட ‘டம்மி’ பில்லர்களில் உள்ள டி.எம்.டி கம்பிகள் துருப்பிடித்து இருக்கும்.

Update: 2019-07-05 22:30 GMT
ட்டுமான பணிகளின்போது எதிர்கால கட்டமைப்புகளை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட ‘டம்மி’ பில்லர்களில் உள்ள டி.எம்.டி கம்பிகள் துருப்பிடித்து இருக்கும். அந்த நிலையில் துருவை அகற்ற கீழ்க்கண்ட வழி முறைகளை கடைப்பிடிக்கலாம்.

* கம்பிகளின் மீது ‘ரஸ்ட் கிளீனர்’ ரசாயனத்தை பூசி, சுமார் 3 மணி நேரம் உலரச்செய்ய வேண்டும்.

* அதன் பின்னர், தக்க ‘வயர் பிரஷ்’ (இரும்பு பிரஷ்) கொண்டு கம்பிகளின் துருவை அகற்றி விட்டு, தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, உலர வைக்க வேண்டும்.

* கம்பிகள் நன்றாக உலர்ந்த பின்னர், 2 மணி நேர இடைவெளியில், 2 முறை என்ற அளவில் துருத்தடுப்பு மேற்பூச்சு  (Corrosion Inhibitor)  பூசி உலர்ந்த பின்னர், கட்டுமானப் பணிகளை செய்யலாம்.

மேலும் செய்திகள்