வங்கிகள் அளிக்கும் ‘பிரிட்ஜ் லோன்’ வீட்டுக் கடன் திட்டம்

ஒருவர் தனது பழைய வீட்டை குறுகிய காலத்தில் விற்பனை செய்து விட்டு, புதிய வீடு வாங்க வேண்டும் என்ற சூழ்நிலையில் வங்கிகள் அளிக்கும் கடன்திட்டம் ‘பிரிட்ஜ் லோன்’ என்று சொல்லப்படுகிறது.

Update: 2019-08-24 09:09 GMT
அவசரமான தருணங்களில், ஒருவரது பழைய வீட்டை வாங்க விரும்புபவர் குறைந்த விலைக்கு கேட்கும் நிலை உருவாகலாம். அந்த சூழலில் புதிய வீட்டை வாங்குவதற்கான பணம் போதுமானதாக இருக்காது. பழைய வீடு விற்பதற்கும், புதிய வீட்டை வாங்குவதற்கும் இடையில் உள்ள கால அவகாசத்தை கருத்தில் கொண்டு வங்கிகளால் தரப்படும் குறுகிய கால வங்கி கடன் ‘பிரிட்ஜ் லோன்’ (Ho-me Sh-ort Te-rm Br-i-d-ge Lo-an) ஆகும். தமக்கு சொந்தமான, தற்போது குடியிருக்கும் வீட்டை விற்பனை செய்து விட்டு, அதை விட பெரிய வீட்டை வாங்க விரும்பும் வாடிக்கையாளருக்கு வங்கிகள் இந்த வகையில் உதவுகின்றன.

இந்தக் கடன் திட்டத்தில் புதிய வீட்டிற்கான மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கடன் தொகை கிடைக்கும். மேலும், பழைய வீட்டை 2 வருடங்களுக்குள் விற்பனை செய்துவிட்டு, புது வீட்டுக்கான கடன் தொகையை திருப்பி செலுத்தும் வகையிலும் இக்கடன் வழங்கப்படுகிறது. ‘பிரிட்ஜ் லோன்’ வட்டி விகிதமானது, வழக்கமான வீட்டு கடன் வட்டியை விட சற்று கூடுதலாக இருக்கலாம்.

மேலும் செய்திகள்