திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள்

நகர்ப்புற திட்டத்தின்படி திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலங்கள் உள்ளாட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்படும்.

Update: 2019-10-04 22:30 GMT
சென்னை பெருநகர வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளில் உள்ள சில பிரிவுகளின்படி திறந்தவெளி இடங்கள், சாலைகள், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் ஆகியவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களை (Open Space Reservation) சி.எம்.டி.ஏ அனுமதி அளித்த வரைபடத்திற்கேற்ப, பொது நோக்கத்தின்படியும், நகர்ப்புற திட்டத்தின்படியும் உள்ளாட்சி அமைப்புக்கு பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்படும்.

அந்த நிலங்கள் அன்பளிப்பு ஒப்பாவணங்களாக பதிவு செய்து அளிப்பதற்கு முன்பாகவே உள்ளாட்சி அமைப்புக்கு அவை தாமாகவே உடைமையாகிவிடும். தற்பொழுது இவ்வகை நிலங்கள் வீடு கட்டும் வணிகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அன்பளிப்பு ஒப்பாவணம் மூலமாக, சென்னை நகர முனிசிபல் நகராட்சி சட்டத்தின் 74–வது பிரிவின்படி மன்ற தீர்மானத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் செய்திகள்