வரவேற்பறையை அலங்கரிக்கும் ‘மணி பிளான்ட்’ செடிகள்

அழகிய கொடிபோல படர்ந்து வளரும் ‘மணி பிளான்ட்’ செடியை எளிதாக வளர்க்கலாம் என்பதால் பலரும் அதை வீடுகளில் வைக்க ஆர்வமாக உள்ளார்கள்.

Update: 2019-10-18 22:15 GMT
ழகிய கொடிபோல படர்ந்து வளரும் ‘மணி பிளான்ட்’  செடியை எளிதாக வளர்க்கலாம் என்பதால் பலரும் அதை வீடுகளில் வைக்க ஆர்வமாக உள்ளார்கள். குறிப்பாக, ‘மணி பிளான்ட்’ செடியை வளர்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற வாஸ்து ரீதியான நம்பிக்கையும் மற்றொரு காரணமாக இருக்கிறது. குடியிருப்புகளின் முன் பகுதிகளில் வளர்க்கப்படும் இச்செடிகள் சிறந்த உள் அலங்கார செடிகளாக மாறி வருகின்றன. ‘மணி பிளான்ட்’ செடி வளர்ப்பற்கான குறிப்புகளை இங்கே காணலாம். 

* ‘மணி பிளான்ட்’ செடியானது வாஸ்து ரீதியாக வீடுகளின் தென்கிழக்கு பகுதியில் வைத்து, மேல் நோக்கி படரும்படி வளர்க்க வேண்டும். அந்த திசையில் செடி நன்றாக வளரும் என்பதோடு, வீட்டின் பொருளாதாரம் நிலைக்கும் என்பதும் பலரது நம்பிக்கையாக உள்ளது.. 

* அக்னி பாகமான தென்கிழக்கு திசையில் ‘மணி பிளான்ட்’ செடி வளர்வதால், நவக்கிரகங்களில் அப்பகுதிக்கு உரிய சுக்ரன், குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது.

* வடகிழக்கு பகுதியில் இந்த செடியை வைத்துப் பராமரித்தால் பல சிக்கல்களை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.

* சிறிய பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைத்து அதில் ‘மணி பிளான்ட்’ செடியை வளர்க்கலாம். மேலும், தொட்டியில் மண்ணைப் பரப்பி அதில் நட்டும் வளர்க்கலாம். வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வளர்க்கலாம். 

* அதிக பராமரிப்பு தேவைப்படாவிட்டாலும், அதன் இலைகளின் வளர்ச்சியை சீராக கவனிக்கவேண்டும். வாடிய இலைகளை உடனடியாக அகற்றிவிடுவது செடியின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றது.

மேலும் செய்திகள்