கண்காணிப்பு கேமரா

நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் அமைந்துள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி ஆகியவற்றில் பாதுகாப்பு அடிப்படையில் ‘குளோஸ் சர்க்கியூட் டெலிவிஷன்’ (CCTV) என்ற Video Surveillance கேமரா அமைக்கப்படுவது அவசியமாகி வருகிறது.;

Update:2019-11-02 16:13 IST
பல தனியார் நிறுவனங்கள் இவ்வகை கேமராக்களை பொருத்தி தருகின்றன. பாதுகாப்பு உள்ளிட்ட பன்முகப் பயன்பாடு கொண்ட அவற்றை இணைய வழி மூலமாகவும், கைகளில் வைத்துள்ள மொபைல் போன் மூலமாகவும் செயல்படுத்தலாம். 

இருந்த இடத்தில் உள்ளவாறே வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட் குடியிருப்புகளை எளிதாக கண்காணிப்பு செய்ய இயலும். எல்லா நேரங்களிலும் காட்சிகளை பதிவு செய்யும் வீடியோவில் உள்ள காட்சிகளை தேவைப்படும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். 

மேலும் செய்திகள்