வெளிவாசல் தளத்தை அழகாக்கும் ‘இன்டர்லாக் கற்கள்’

வீட்டின் வெளிப்புற தரைத்தள அமைப்பு மற்றும் பராமரிப்புகளைப் பொறுத்தே அதன் உள்புற சுத்தம் அமைகிறது.;

Update:2020-02-08 04:00 IST
னி வீடுகள் மற்றும் அடுக்குமாடிகளுக்கு கச்சிதமாக செய்யப்பட்ட வெளிவாசல் தள (Outdoor Flooring) அமைப்பு அவற்றின் உள் அழகை தீர்மானிக்கும் என்று கட்டுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீட்டின் வெளிப்புற தரைத்தள அமைப்பு மற்றும் பராமரிப்புகளைப் பொறுத்தே அதன் உள்புற சுத்தம் அமைகிறது. மழைக் காலங்களில் வீட்டை சுற்றிலும் பெரிய மிதியடிகள் போட்டாலும் பராமரிப்பது சிரமம். அதனால், வெளிவாசலில் சிமெண்டு தரைத்தளங்களை அமைப்பதை விட, ‘இன்டர் லாக்’ வகை பதிகற்களை பயன்படுத்தி தரைத்தளம் அமைக்கலாம். கனமான பொருட்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றின் அழுத்தத்தை அவை தாங்கி நிற்பதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, வீடுகள் மற்றும் அபார்ட்மெண்டுகளுக்காக பல வண்ணங்களில் பதிகற்கள் உள்ளன. மழை, வெயில் போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையிலும், பராமரிப்பு குறைவாகவும்,  எளிதாக தரைத்தளத்தை அமைக்கவும் ஏற்ற ரகங்கள் சந்தையில் கிடைக்கின்றன.

மேலும் செய்திகள்