கான்கிரீட் ‘முட்டு’ பலகைகளுக்கான ரசாயன ‘கோட்டிங்’

கான்கிரீட் தளங்கள் அமைக்கும்போது அதற்கேற்ற அளவுகளில் ‘ஷட்டரிங் பிளேட்’ அமைக்கப்பட்டு, முட்டுகள் பொருத்தப்படும். அதன் பின்னர்,

Update: 2021-02-21 22:30 GMT
 மேற்பரப்பில் கான்கிரீட் கலவை இடப்படும். தக்க கால அளவுக்கு பின்னர் ‘ஷட்டரிங் பிளேட்டுகள்’ அகற்றப்பட வேண்டும். அந்த நிலையில் பிளேட்டுகளின் மீது கான்கிரீட் ஒட்டிக்கொண்டு, அகற்றுவது சிரமமாக இருக்கும். இந்த சிக்கலை தவிர்க்க, பாலிமர் அடிப்படையிலான ரசா யன திரவத்தை பிளேட்டுகளில் பூசப்படும் முறை கடைபிடிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

அந்த ரசாயன திரவத்தில் உள்ள ‘பாலி எத்திலீன் போம்’ கான்கிரீட்டுடன் ஒட்டுவதில்லை என்பதால், ‘ஷட்டர் பிளேட்’ மற்றும் கான்கிரீட் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பிணைப்பு குறைகிறது. அதனால், ‘ஷட்டர் பிளேட்டு’ மற்றும் ‘ஷட்டரிங் மேட்’ ஆகியவற்றை எளிதாக அகற்ற இயலும். குறிப்பாக, ‘ஷட்டர் பிளேட்டுகளுக்கு’ ஆயில் மற்றும் கிரீஸ் பூச்சு தவிர்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்